×

கொரட்டூரில் சாலையில் நடந்து சென்ற தாய், மகளை ஆவேசமாக முட்டி தள்ளிய மாடு

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே கொரட்டூர் வடக்கு, பாலாஜி நகர் சாலையில் நேற்று மாலை தாய், தனது மகளுடன் மளிகைக் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கன்றுக்குட்டியுடன் சுற்றி திரிந்த ஒரு பசுமாடு வேகமாக ஓடிவந்து முட்ட முயன்றது. தடுக்க முயன்றனர். இருவரையும் மாடு ஆவேசமாக முட்டி தூக்கி வீசியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ஓடிவந்து, பசுமாட்டை விரட்டி 2 பேரையும் மீட்டனர்.

இதைத் தொடர்ந்து, இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காமிரா வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து 83வது வார்டு மாமன்ற உறுப்பினர் உஷா நாகராஜ் விரைந்தார். அவரது உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பசுமாட்டை பிடித்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கொரட்டூரில் சாலையில் நடந்து சென்ற தாய், மகளை ஆவேசமாக முட்டி தள்ளிய மாடு appeared first on Dinakaran.

Tags : Korattur ,Ambattur ,Balaji Nagar Road, Korattur North ,Dinakaran ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...