×

மாசாணி அம்மன் கோயில் நிதியிலிருந்து உதகையில் ரிசார்ட் கட்டப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அரசு அறிவிப்பு..!!

சென்னை: மாசாணி அம்மன் கோயில் நிதியிலிருந்து உதகையில் ரிசார்ட் கட்டப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் காணிக்கை தொகை ரூ.100 கோடி வங்கியில் வைப்புத் தொகையாக உள்ளது. ரூ.1.4 கோடி ரூபாய் எடுத்து ஊட்டியில் ரிசார்ட் கட்ட அரசு முடிவு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இத்தகைய அரசாணையை ரத்து செய்யக்கோரி செங்கல்பட்டை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில், கோயில் நிதியை கோயில் நலன் சார்ந்த பணிகளுக்கு செலவிட வேண்டுமென பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு உள்ளது. என தெரிவித்த நிலையில், ரிசார்ட் கட்டும் அரசாணையை அரசு தரப்பு வாபஸ் பெறுவதாக கூறியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

 

The post மாசாணி அம்மன் கோயில் நிதியிலிருந்து உதகையில் ரிசார்ட் கட்டப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அரசு அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Government ,Uthaka ,Amman Temple Fund ,Chennai ,Udag ,Masani Amman Temple Fund ,Pollachi Anaimalai Masani Amman Temple ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம், கொடைக்கானல், உதகையில்...