×

சாலை விபத்தில் வடமாநில தொழிலாளி பலி

 

திருப்பூர், மார்ச் 15: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் கேவல்குமார் (60). இவர், திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் கோபால்டு மில் பகுதியில் தங்கி, சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கோபால்டு மில் பகுதியில் சாலையை கடக்க முயன்ற கேவல்குமார் மீது அந்த வழியாக வேகமாக வந்த பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பாதி வழியிலேயே கேவல்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலை விபத்தில் வடமாநில தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Northern ,Tiruppur ,Kevalkumar ,Jammu and Kashmir ,Ammapalayam Cobalt Mill ,Thirumuruganpoondi ,Cobalt Mill ,Northern State ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த...