×

தையல் மிஷின் வழங்கல்

 

நிலக்கோட்டை, மார்ச் 15: சின்னாளபட்டி அருகேயுள்ள காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத்தில் எம்பிராய்டரி கைவினைஞர்கள் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் கைவினை பயிற்சியாக தையல், எம்பிராய்டிங் போன்ற பயிற்சிகள் ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்டு முறையாக பயிற்சி பெற்ற பெண்களுக்கு தேசிய கைவினை மேம்பாட்டு திட்டத்தின் நிதியுதவியுடன் இலவச தையல் மிஷின் மற்றும் எம்பிராயிடரி மிஷின் வழங்கும் விழா நடந்தது. கைவினை எம்பிராய்டரி கலைஞர்கள் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநாதம் பயிற்சி பெற்ற 100 பெண்களுக்கு இலவச தையல் மிஷின்களை வழங்கினார். இதில் பல்கலைக்கழக பதிவாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பயிற்சி பெற்ற பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

The post தையல் மிஷின் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Gandhigrama University Agricultural Science Center ,Chinnalapatti ,Embroidery Artisans and Manufacturers Institute ,Dinakaran ,
× RELATED கொடைரோடு அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி