- நாகப்பட்டினம் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
- நாகப்பட்டினம்
- நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு கூட்டம்
- ஓய்வு பெற்ற அதிகாரிகள்
- சங்கம்
- கலியமூர்த்தி
- மாவட்ட செயலாளர்
- அண்ணாசாமி
- தலை
- கோபாலசாமி
- மாவட்ட பொருளாளர்
- சிங்காரவேலு
- தின மலர்
நாகப்பட்டினம்,மார்ச்15: ஓய்வுபெற்ற அலுவலர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அண்ணாசாமி வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் கோபால்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சிங்காரவேலு வரவு செலவு கணக்கை வாசித்தார். ஒன்றிய அரசு வழங்குவது போல் மாநில அரசும் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் எந்த தேதியில் இறந்தாலும் அந்த மாத முழு ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்கள் இறந்தால் அவர்களின் ஈமச்சடங்கிற்கு ரூ.25 ஆயிரம் முன்பணம் வழங்கி அதை அவர்களின் மொத்த தொகையான ரூ.50 ஆயிரத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது நிறைந்த ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இணை செயலாளர் ராஜாராமன் நன்றி கூறினார்.
The post நாகப்பட்டினம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.