×

தடகள போட்டியில் சாதித்த திருப்புவனம் முதியவருக்கு பாராட்டு

திருப்புவனம், மார்ச் 15: பெங்களூரு இந்திய சாய் மைதானத்தில் முதியோருக்கான 42வது தடகளப் போட்டி மார்ச் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் திருப்புவனம் புதூரை சேர்ந்த கிருஷ்ணன் (77) பங்கேற்று தடியூன்றி தாண்டுதல்(போல் வால்ட்) போட்டியில் முதல் பரிசாக தங்கப்பதக்கமும் மும்முறை தாண்டும் (ட்ரிபிள் ஜம்ப்) போட்டியில் 2 வெண்கலப்பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். வரும் மே மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசியப்போட்டியில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பரிசி பெற்ற கிருஷ்ணனை முதியோர் தடகள சங்கத்தின் துணைத்தலைவர் ஆனந்தக்குமார் மற்றும் திருப்புவனம் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.

The post தடகள போட்டியில் சாதித்த திருப்புவனம் முதியவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Thiruppuvanam ,42nd Athletics Championships ,Indian Sai Stadium ,Bengaluru ,Krishnan ,Puthur ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி