- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டவுன் பஞ்சாயத்து
- மண்டபம்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- நிதி துறை
- மண்டபம் பேரூராட்சி
- தின மலர்
மண்டபம், மார்ச் 15: தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதி துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெடை, மண்டபம் பேரூராட்சியில் பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் காணொளி காட்சி மூலம் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நேற்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் விதமாக மற்றும் திட்டங்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனை மண்டபம் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக, பேருந்து நிலைய வளாகத்தில் எல்.இ.டி வைக்கப்பட்டு நேரடியாக காணொளி காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, பேரூராட்சி அலுவலக இளநிலை உதவியாளர் முனியசாமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மண்டபம் பகுதியிலிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பார்வையிட்டனர்.
The post மண்டபத்தில் பேரூராட்சி சார்பில் தமிழக பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு appeared first on Dinakaran.
