×

திருக்குறுங்குடி அருகே முதியவர் மீது தாக்குதல்

களக்காடு,மார்ச் 15: திருக்குறுங்குடி அருகே முதியவரை தாக்கிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். திருக்குறுங்குடி அருகேயுள்ள தெற்கு ஆவரந்தலையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (65). விவசாயியான இவர் கடந்த மாதம் 28ம் தேதி தனது வயலில் விளைந்திருந்த வாழைத்தார்களை வெட்டி, விற்பனை செய்வதற்காக காவல்கிணறு சந்தைக்கு கொண்டு சென்றிருந்தார். அப்போது அவரது பக்கத்து வயல் உரிமையாளரான கீழக்கட்டளை பாலன் என்பவர் அவருக்கு போன் செய்து, தனது வயலில் வெட்டப்பட்ட 13 வாழைத்தார்களை காணவில்லை. யாராவது விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளார்களா? என பார்த்து சொல்லும் படி கூறினாராம். இதனைதொடர்ந்து கிருஷ்ணன் காவல்கிணறு சந்தையில் பார்த்த போது, கீழக்கட்டளையை சேர்ந்த கார்த்தீசன் 13 வாழைத்தார்களை விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் பாலனிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக கார்த்தீசனுக்கும், கிருஷ்ணனுக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணன் கீழக்கட்டளையில் உள்ள டீக் கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அங்கு வந்த கார்த்தீசன் மனைவி முருகேஷ்வரிக்கும், கிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகேஷ்வரி வாளியில் கொண்டு வந்திருந்த மாட்டு சாணத்தை கிருஷ்ணன் மீது ஊற்றி, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, முருகேஷ்வரியை தேடி வருகிறார்.

The post திருக்குறுங்குடி அருகே முதியவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Thirukuruungudi ,Kalakkadu ,Krishnan ,South Aavarantalai ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி