×

கடைகளில் 50 கிலோ கேரிபேக் பறிமுதல்

ராசிபுரம், மார்ச் 15: ராசிபுரம் நகராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில், நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜ் தலைமையில், ராசிபுரம் அண்ணா சாலையில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, 7கடைகளில் தடை செய்யப்பட்ட 50கிலோ பிளாஸ்டிக் கேரிபேக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த கடைகளுக்கு ₹10ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த ஆய்வில் துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள் பயன்படுத்தி வந்தால், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் எச்சரித்தனர்.

The post கடைகளில் 50 கிலோ கேரிபேக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Tamil Nadu government ,Rasipuram Municipality ,Municipal Commissioner ,Ganesan ,Municipal Sanitation Officer ,Selvaraj ,Anna Salai… ,
× RELATED முட்டையிலிருந்து செய்யப்படும்...