×

லக்சயா சென் மோசமான தோல்வி

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் காலிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன வீரர் எஸ்.எப்.லீயிடம் தோற்று வெளியேறினார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன வீரர் ஸீபெங் லீ உடன் மோதினார். துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சீன வீரர், 21-10, 21-16 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

 

The post லக்சயா சென் மோசமான தோல்வி appeared first on Dinakaran.

Tags : Laxaya Chen ,Birmingham ,Lakshaya Chen ,S. F. ,Lee ,All England Open Badminton Championship ,Birmingham, England ,Laxaya Sen ,Dinakaran ,
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன்: சாம்பியன் பட்டம் வென்ற சீன வீரர்