×

கவின் ஜோடியானார் பிரீத்தி அஸ்ரானி: படப்பிடிப்பு துவங்கியது

சென்னை: நடன இயக்குனரான சதீஷ் இயக்கும் படத்தில் கவின் நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. டான்ஸ்ராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து நடிகராகவும் வலம் வரும் சதீஷ் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சமீபத்தில் வெற்றி பெற்ற டாடா படத்தின் மூலம் பிரபலமான கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

அயோத்தி பட நாயகி பிரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இளைஞர்களைக் கவரும் வகையில் இன்றைய தலைமுறையின் கதையைச் சொல்லும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கி சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெறவுள்ளது என சதீஷ் தெரிவித்தார். ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார், எடிட்டராக பிரனவ் பணியாற்ற, சூர்யா ராஜீவன் கலை இயக்கம் செய்கிறார்.

The post கவின் ஜோடியானார் பிரீத்தி அஸ்ரானி: படப்பிடிப்பு துவங்கியது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kavin ,Preeti Asrani ,CHENNAI ,Gavin ,Satish ,Romeo Pictures Rahul ,Anirudh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஈரோடு அருகே பட்டியலின இளைஞர் மீது வீடு...