×

தமிழக அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1433 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிகிறது

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1433 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று கடந்த நான்கு ஆண்டு காலங்களில் தமிழக மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தந்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களைத் தொடர்ந்து அறிவித்தும், மாற்றுத்திறனாளிகளின் சிரிப்பில் கலைஞரை காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளின் இதயங்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்ந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.1433 கோடி ஒதுக்கீடு செய்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதி நவீன கருவிகள் வழங்க திட்டம் செயலாக்கம் செய்ய ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்தும், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்க சட்ட திருத்தம் முன் வடிவம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளை தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு நிறுவனமும் 10 மாற்றுத் திறனாளிகளை தங்களது நிறுவனத்தில் பணியமர்த்தப்படும் பட்சத்தில், மாதந்தோறும் பனியமர்த்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே போல பல்வேறு மாற்று திறனாளி சங்கங்கள், மாற்று திறனாளிகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

The post தமிழக அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1433 கோடி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிகிறது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Development Association ,Disabled ,President ,Re. Thangam ,Chief Minister of ,Tamil ,Nadu… ,
× RELATED இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு...