×

நவீன தமிழ்நாட்டை உருவாக்கும் பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம், இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம், தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்,

புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழ்நாடு பட்ஜெட். 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளது.

The post நவீன தமிழ்நாட்டை உருவாக்கும் பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Minister of Finance ,Thangam Thenrarasu ,Mu. K. Stalin ,
× RELATED விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட...