×

தமிழ்நாடு முழுவதும் 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும்: தமிழ்நாடு பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். சென்னையில் 950, மதுரையில் 100, கோவையில் 75 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. பூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு – பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும்: தமிழ்நாடு பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Gold South ,Chennai ,Minister ,Thangam Tennarasu ,Madura ,Goa ,Gold South Rasu ,
× RELATED திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா...