×

போலி ஆவணம் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து நிலமோசடி

 

திருச்சி, மார்ச் 14: ஆள்மாறாட்டம் செய்து நில மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். திருச்சி, தில்லை நகர், 6வது கிராசை சேர்ந்தவர் தனலட்சுமி(60). இவரது சகோதரர் லட்சுமண மோகன். இவருக்கு உறையூர், பாண்டமங்கலம், பாத்திமா நகரில் சொந்தமாக 2,400 சதுர அடி நிலம் உள்ளது. இந்நிலையில் திருச்சி – மதுரை சாலை, மணிகண்டம் 3வது தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் உள்பட பலர் கடந்த 2015ம் ஆண்டு லட்சுமண மோகன் பெயரை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்ததாக தெரிகிறது.

முக்கியமாக, இந்த கும்பல் நிலத்திற்கான ஆவணங்கள் காணாமல் போனதாக திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து, சிஎஸ்ஆர் பெற்று போலி ஆவணங்கள் தயாரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் கடந்த 12ம் தேதி சுரேஷ்குமார் உள்பட பலர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

The post போலி ஆவணம் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து நிலமோசடி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Metropolitan Crime Branch ,Dhanalakshmi ,6th Cross, Thillai Nagar, Trichy ,Lakshmana Mohan ,Uraiyur ,
× RELATED ஸ்டைலுக்கானது மட்டுமல்ல கண்களை...