×

முத்துப்பேட்டை 12வது வார்டு பகுதியில் பொது குடிநீர் குழாய் அமைப்பு

 

முத்துப்பேட்டை, மார்ச் 14: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 12-வது வார்டு குட்டியார் பள்ளி வடக்கு தெரு பகுதி அரசர்குளம் எதிர்க்கரையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்கு பொதுமக்களுக்காக இருந்த பொது குடிநீர் குழாய் சுமார் ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து பேரூராட்சி சார்பில் ஒரு லட்சம் மதிப்பீட்டில் சுமார் 110 மீட்டர் புதிய குழாய் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவுற்றது. இதனையடுத்து அப்பகுதி கவுன்சிலர் தமீம் அன்சாரி தலைமையில் நேற்று பொது குடிநீர் குழாய் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் குடிநீர் பிடித்து சென்றனர். பேரூராட்சி மன்ற தலைவர், மன்ற உறுப்பினர், செயல் அலுவலர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

The post முத்துப்பேட்டை 12வது வார்டு பகுதியில் பொது குடிநீர் குழாய் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Muthupettai ,Arasarkulam ,Kuttiyar School North Street ,Muthupettai Town Panchayat 12th ward ,Thiruvarur district ,ward ,
× RELATED முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ரூ.3.99 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி பணிகள்