- VAO சங்கம்
- வரி தண்டலர்
- திருத்துறைப்பூண்டி
- கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்
- பரமேஸ்வரி
- திருவாரூர் மாவட்டம்
- தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள்…
- தின மலர்
திருத்துறைப்பூண்டி, மார்ச் 14: திருத்துறைப்பூண்டி வட்டாட்சியராக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பரமேஸ்வரிக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியராக பரமேஸ்வரி நேற்றுமுன்தினம் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து புதிய தாசில்தாருக்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வட்டத்தலைவர் விசுபாலன் தலைமையில் வட்ட பொருளாளர் மணிகண்டன், விஏஓ சங்க வட்ட துணை தலைவர் கனிமொழி, துணைச் செயலாளர் குணச்சேகரன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது துணை தாசில்தார் ஜோதிபாசு, வருவாய் ஆய்வாளர் நடராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
The post திருத்துறைப்பூண்டி புதிய வட்டாட்சியருக்கு விஏஓ சங்கத்தினர் வாழ்த்து appeared first on Dinakaran.