- புதுச்சாவடி ஊராட்சி
- Jayankondam
- புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
- யூனியன்
- அரியலூர் மாவட்டம்
- கலெக்டர்
- மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
- தின மலர்
ஜெயங்கொண்டம், மார்ச் 14: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் ஐயப்பன் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் பள்ளிக்கு நீண்ட நாள் வருகை புரியாத மாணவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 8ம் வகுப்பு பயிலும் சபரி என்ற மாணவர் கண்டறியப்பட்டு மாணவரின் உறவினர்களை அவர்களின் வீட்டில் சந்தித்து தமிழக அரசின் கல்வி சார்ந்த நலத்திட்டங்களை தெளிவாக எடுத்து கூறி மேற்கண்ட மாணவனை தொடர்ந்து பள்ளிக்கு வந்து கல்வி பயில கேட்டுக்கொண்டகர். இதனடிப்படையில், உடனடியாக அந்த மாணவன் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு தொடர்ந்து கல்வி பயில தேவையான வழிமுறைகளை கூறி பள்ளி வரவேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி மாணவரும் இனி தொ டர்ந்து பள்ளிக்கு வருவதாக உறுதி அளித்துள்ளார்.
The post புதுச்சாவடி ஊராட்சி பகுதியில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.