×

ஊரக வளர்ச்சி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நேற்று மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இதில் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் யாரும் வேலைக்கு வரமால் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் மற்றும் ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

The post ஊரக வளர்ச்சி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Development ,R.K.Petta ,R.K.Petta Panchayat Union Office ,Tamil Nadu Rural Development Department Officers Association ,Strike ,Dinakaran ,
× RELATED கோணி தைக்கும் குடோனில் தீ விபத்து