திருத்தணி: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 2025-2026ம் ஆண்டிற்கான தினசரி மார்க்கெட், கட்டண கழிப்பிடம், பேருந்து நிலைய சுங்க வசூல் உரிமம் தொடர்பான பொது ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற்றது. குத்தகை உரிமம் ஏலத்தில் ரவி என்பவர் ரூ.16.10 லட்சத்துக்கு ஓர் ஆண்டுக்கான குத்தகை உரிமம் பெற்றார். பேருந்து நிலைய சுங்க வசூல் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
இதில் குத்தகை உரிமம் பெற்றவர்கள் 18 சதவீதம் ஜிஎஸ்டியுடன் ஏலத்தொகையை முழுமையாக 24 மணி நேரத்தில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டும். இருப்பினும் ஏலம் எடுத்தவர்கள் பணம் செலுத்த தவறியதால், ஏலம் ரத்து செய்யப்பட்டு 2வது முறையாக நேற்று நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற ஏலத்தில் வைப்புத்தொகை செலுத்தியவர்கள் ஏலத்தில் பங்கேற்றனர்.
தினசரி மார்க்கெட் ஏலத்தில் ரூ.11.77 லட்சத்திற்கு லிங்கம் என்பவர் குத்தகை உரிமம் பெற்றார். அதேபோல், வாகன சுங்கவரி வசூல் ஏலத்தில் ரூ.2.01 லட்சத்திற்கு மணி என்பவர் குத்தகை உரிமம் பெற்றார். பொது ஏலத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், இளநிலை உதவியாளர் முருகவேல், பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
The post பொதட்டூர்பேட்டையில் 2வது முறையாக மார்க்கெட் ஏலம் appeared first on Dinakaran.