×

ஆவின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பால் உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆவின் சார்பில் பால் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் மு.பிரதாப் தலைமை தாங்கினார். ஆவின் பொது மேலாளர் நாகராஜன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி, துணைப் பதிவாளர் (பால்வளம்) சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் புதிய சங்கங்கள் ஆரம்பித்து செயலாளர்களை தேர்ந்தெடுப்பது, செயலிழந்த சங்கங்களை புதுப்பிப்பது, கால்நடைகளுக்கான தீவனங்கள் வளர்ப்பதை அதிகப்படுத்துவது, தனி நபருக்கு பால் வழங்குவதை முறைப்படுத்தி ஆவினுக்கு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தரம் குறைவான பாலை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பரிசோதித்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

சங்க செயலாட்சியர்கள் அவர்களுக்கான இலக்குகளை தினந்தோறும் வாட்ஸ் அப் மூலம் அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். பால் உற்பத்தியை பெருக்கி லாபகரமாக ஆவின் இயங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் மு.பிரதாப் அறிவுறுத்தினார். இதில் ஆவின் அலுவலர்கள், சங்க செயலாளர்கள், செயலாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ஆவின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பால் உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Aavin ,Thiruvallur ,Milk Producers Association ,Thiruvallur District Collector's Office ,Collector ,M. Pratap ,General Manager ,Nagarajan ,Dinakaran ,
× RELATED உயர்மட்ட மேம்பாலம் கட்டநெடுஞ்சாலைத்துறை ஆய்வு