- தரமணி மண் ஆராய்ச்சி பிரிவு
- நீர்வளத் துறை
- சென்னை
- மனமழ் போற்றுதும்
- மண் தரம் மற்றும் ஆராய்ச்சி பிரிவு
- வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆணையம்
- தரமணி, சென்னை
- நீர்வளச் செயலாளர்
- மங்கத்ராம் சர்மா…
- தின மலர்
சென்னை: சென்னை தரமணியில் நீர்வளத்துறையின் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மண்தன்மை மற்றும் ஆராய்ச்சிக் கோட்டத்தின் சார்பில் ‘மாமழை போற்றுதும்’ தொழில்நுட்ப கருத்தரங்கம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கருத்தரங்கத்தை நீர்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா தொடங்கி வைத்தார்.
இந்த கருத்தரங்கில் நீர்வளத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகளை மாநில அரசின் பிற துறைகளோடு ஒன்றிணைந்து செயல்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை குறித்தும், நீர் ஆதாரங்களை முறையாக பயன்படுத்தி நீர் ஆதாரங்களை பேணி பாதுகாத்தலின் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மண்தன்மை மற்றும் ஆராய்ச்சிக் கோட்டத்தின் அதிகாரி கூறியதாவது: துறையின் பொறியாளர்களுக்கான பட்டறைப் பயிற்சி கருத்தரங்கம் – முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், நீர்வளத்துறை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களின் மூத்த பொறியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலமாக நீர்வள பொறியியலில் சந்திக்கக்கூடிய சவால்கள் மற்றும் அவற்றை எதிர் கொள்ளுதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பொறியியல் இளங்கலை, முதுகலை, முனைவர் பயிலும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களிடமிருந்து புவி தொழில்நுட்ப பொறியியல், கட்டுமானப் பொருட்கள், செயற்கை நுண்ணறிவு, காலநிலை மீள்தன்மை போன்ற தலைப்புகளில் மாநாட்டில் தொழில்நுட்ப கட்டுரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் கருத்தரங்க மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 60 மாணவர்களின் தொழில்நுட்ப கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.
இதில் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் தொழில்நுட்ப கட்டுரைக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு மண் பரிசோதனை, ஆய்வுகள் உள்ளிட்ட தேவைப்படும் அனைத்து பரிசோதனைகளை மண் தன்மை மற்றும் ஆராய்ச்சிக் கோட்டத்தில் செய்து கொள்ளலாம்.
அதேபோல் அரசு சார்ந்த துறைகள் மட்டுமின்றி தனியார் துறைகளுக்கும் தேவையான பரிசோதனை செய்யக்கூடிய அளவிற்கு தற்போது இந்த ஆராய்ச்சிக் கோட்டத்தில் இயந்திரங்கள் உள்ளன. மேலும் 3 நாட்கள் எடுத்து கொள்ளும் பரிசோதனைகளை தற்போது 6 மணி நேரத்தில் பரிசோதிக்கும் வசதிகளும், அனைத்து பரிசோதனை முடிவுகளை இணையத்தளத்தில் உடனுக்குடன் கிடைக்கூடிய வகையில் மண் தன்மை ஆராய்ச்சி கோட்டம் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post 6 மணிநேரத்தில் மண் பரிசோதனை முடிவுகள் தரமணி மண் ஆராய்ச்சி கோட்டத்தில் செய்து கொள்ளலாம்: நீர்வளத்துறை உயர்அதிகாரி தகவல் appeared first on Dinakaran.
