×

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் அரசின் திட்டங்களை பெற கருத்தரங்கம்

மதுராந்தகம்: ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் அரசின் திட்டங்களை பெறுவது குறித்து கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்கி பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் மற்றும் கணினி பயன்பாடுகள் துறை சார்பில் ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் சொத்துரிமை எனும் தலைப்பில் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூரியின் மத்திய நூலக அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு கல்லூரியின் தாளளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார்கள். கல்லூரியின் முதல்வர் ராஜா, கல்லூரியின் துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, கல்லூரியின் டீன் ராமசாமி, நிர்வாக அலுவலர் சதானந்தன், ஒருங்கினைப்பாளர் இளங்குறிசில், கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் அருண்குமார் முன்னிலை வகித்தனர். மின்னணுவியல் மற்றும் தொடர்பு துறை பேராசிரியர் திருமறைச் செல்வன், அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இயக்குனர் வி. பாலசுப்பிரமணியன், கலந்துகொண்டு அரசின் திட்ட வரைவுகளை மேற்கொள்வது குறித்தும் அவற்றை பெறுவது குறித்தும் பேசினார். இக்கருத்தரங்கில் 60க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பாலசுப்பிரமணியம் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சி இறுதியில் சிவில் துறை பேராசிரியர் தியாகராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

The post ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் அரசின் திட்டங்களை பெற கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Adiparasakthi Engineering College ,Madhurantakam ,Research Development Center and Computer Applications Department ,Melmaruvathur Adiparasakthi Engineering College ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...