×

வேலைநிறுத்த போராட்டம்

கெங்கவல்லி, மார்ச் 14:தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகரகள் சங்கம் சார்பில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி பிடிஓ அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் 22 பேர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், பணிகள் பாதிக்கப்பட்டது. அலுவலகம் வெறிச்சோடியது. பல்வேறு அலுவல்களுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

The post வேலைநிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Tamil Nadu Rural Development Department Officers' Association ,Kengavalli PDO ,Salem district ,Dinakaran ,
× RELATED நடுரோட்டில் ரகளை செய்த வாலிபர் கைது