×

ரூபாய் சின்னத்தை மாற்றுவதா? நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு

புதுடெல்லி: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘நாளை (இன்று) தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் ஆவணங்களில் அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான ‘₹’ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது. ரூபாய் சின்னம் ‘₹’ சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. யுபிஐயை பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?’’ என கூறி உள்ளார்.

The post ரூபாய் சின்னத்தை மாற்றுவதா? நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,New Delhi ,Union Finance Minister ,DMK government ,Tamil ,Nadu ,
× RELATED நாளை மறுநாள் முதல் மக்களின் டிஜிட்டல்...