×

திருமணமான 5 மாதத்தில்இளம்பெண் தற்கொலை

தூத்துக்குடி, மார்ச் 14: தூத்துக்குடியில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி கீழ அலங்காரதட்டு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (25), மீனவர். இவரது மனைவி அன்சியா (23). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு வாரத்திற்கு முன் குடும்ப பிரச்னை காரணமாக அன்சியா கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் மனமுடைந்த அன்சியா, தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்துள்ளார். அன்சியாவுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் தூத்துக்குடி சப்-கலெக்டர் பிரபு, மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

The post திருமணமான 5 மாதத்தில்இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Ajith Kumar ,Keezhala Alanarathattu ,Ansia ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி