×

பி.பள்ளிப்பட்டி ஊராட்சியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 14: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி.பள்ளிப்பட்டி ஊராட்சி பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் கோவிந்தசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு தாய்வீட்டு சீதனமாக, 100-கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். நிகழ்சியில் வட்டார மருத்துவ அலுவலர் கெளரிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளர் வஜ்ஜிரவேல், பேரூர் செயலாளர்கள் ராஜா, தென்னரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் சேகர், தீர்த்தகிரி, பரத்குமார், தாய் செல்வம், அதியமான், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post பி.பள்ளிப்பட்டி ஊராட்சியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு appeared first on Dinakaran.

Tags : shower ,P. Pallipatti ,Pappireddipatti ,Dharmapuri district ,Govindaswamy ,MLA ,District Medical Officer… ,P. Pallipatti panchayat ,
× RELATED சந்து கடையில் மது விற்றவர் கைது