×

₹5 லட்சம் மதிப்பில் புதிய மின் மாற்றி அமைப்பு

பரமத்திவேலூர், மார்ச் 14: கபிலர்மலை அருகே ₹5லட்சத்தில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பரமத்தி வேலூர் அடுத்த கபிலர்மலை மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட வலசுப்பாளையம் இருகூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து குறைந்த மின் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் மற்றும் கபிலர்மலை உதவி செயற்பொறியாளர் ராஜா ஆகியோரிடம், இதனை சரி செய்து, சரியான அளவில் உயர் மின் அழுத்த மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அப்பகுதியில் ₹5 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) நிறுவப்பட்டு, சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த புதிய மின் மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சியில், கபிலர்மலை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ராஜா கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரன், மின்வாரிய பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ₹5 லட்சம் மதிப்பில் புதிய மின் மாற்றி அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,Kapilarmala ,Paramatti ,Vellore ,Kapilarmalai Electricity Office ,Valasuppalayam Dughur ,Dinakaran ,
× RELATED நைனாமலை அடிவாரம் ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா