×

ஏழாயிரம்பண்ணையில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் ‘கப்’

ஏழாயிரம்பண்ணை, மார்ச் 14: ஏழாயிரம்பண்ணையில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதால் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏழாயிரம்பண்ணையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நடுத்தெரு பகுதியில் சேரும் குப்பைகளை அந்த தெரு வழியாக செல்லும் சாலையின் ஓரத்தில் கொட்டப்படுகிறது. இந்த சாலை ஓரத்தில் குப்பைகள் மற்றும் மாமிசக் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்னை குறித்து ஏழாயிரம்பண்ணை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் பலமுறை மனு அளித்துள்ளனர். மேலும் சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளை தீ வைப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். எனவே அப்பகுதியில் சேரும் குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஏழாயிரம்பண்ணையில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் ‘கப்’ appeared first on Dinakaran.

Tags : Ezhayirampannai ,panchayat ,Vembakottai ,Virudhunagar district… ,Dinakaran ,
× RELATED வெள்ளபுத்தூர் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு