×

கொள்முதல் நிலைய ஊழியர் விபத்தில் பலி

தேனி, மார்ச் 14: பெரியகுளம் அருகே பாலத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.தேனி அருகே முத்துத்தேவன்பட்டி தெற்கு காலனியை சேர்ந்தவர் பெருமாள் மகன் மணிகண்டன்(38). இவர் பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பணி முடிந்து மணிகண்டன் அவரது டூவீலரில் திண்டுக்கல்-குமுளி பைபாஸ் சாலையில் முத்துத்தேவன்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி முனீஸ்வரன் கோயில் அருகே உள்ள பாலத்தில் நிலைதடுமாறி இவரது டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மணிகண்டன் தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொள்முதல் நிலைய ஊழியர் விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : Procurement centre ,Theni ,Periyakulam ,Manikandan ,Perumal ,Muthuthevanpatti South Colony ,Thamaraikulam ,Periyakulam… ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்