×

வணிகவரி அலுவலர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மதுரை, மார்ச் 14: தமிழ்நாடு உதவி ஆணையர், வணிகவரி அலுவலர் மற்றும் துணை வணிகவரி அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே டாக்டர் தங்கராஜ் சாலையில் உள்ள வணிக வரி அலுவலக வளாகத்தில் ஒரு மணி நேர பணித் துறப்பு செய்த சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ேகாட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் அக்பர் பாஷா முன்னிலை வகித்தார்.

முது நிலை தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்திட வேண்டும். அனைத்து கோட்டங்களிலும் தனித்தனி சட்டப்பிரிவு ஏற்படுத்திட வேண்டும். பதவி உயர்வை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும். நேரடி நியமனத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும். களப்பணிக்கு செல்லும் அலுவலர்களுக்கு உரிய வாகன ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான சங்க அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வணிகவரி அலுவலர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,Commercial Tax Officer ,Deputy Commercial Tax Officers Association ,Tax Office ,Dr. ,Thangaraj Salai ,Madurai District Court… ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி