×

தண்ணீர் தொட்டியில் இருந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வெள்ளார் கிராமம், அரசமரத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (55) என்பவர் நேற்று வெள்ளார் பஞ்சாயத்து அலுவலகம் சார்பில் எருமப்பட்டி, காட்டுவளவு என்ற இடத்தில் புதிதாக வேலை நடைபெற்று வரும் தண்ணீர் தொட்டியின்மீது ஏறி பணி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சுப்ரமணி குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தண்ணீர் தொட்டியில் இருந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Mu ,K. ,Stalin ,Subramani ,Salem District, Mattur Circle, ,Velar Village, Arasamarathur Region ,Buffalo ,Katuluavu ,Valar Panchayat Office ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?