லக்னோ: பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நாட்டை பாஜ பலவீனப்படுத்தி விட்டது என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று கூறுகையில்,‘‘பாஜ ஆட்சியில் சமூகத்தில் வெறுப்பு பரவுவதால் நாடு பலவீனமாகி விட்டது. அவர்களின் செயல்பாடுகள், மொழி, நடத்தை ஆகியவை மக்களிடையே பிளவை ஏற்படுத்தி விட்டது. ஒட்டு மொத்த சந்தையையும் அவர்கள் மற்றவர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். சந்தை உங்கள் கைகளில் இல்லாத போது யார் வியாபாரம் செய்வார்கள்.மற்றவர்கள் நம் நாட்டிற்கு வந்து நமது முழு சந்தையையும் கைப்பற்றுகிறார்கள்.
நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாஜ பலவீனப்படுத்தியுள்ளது. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எந்த ஆதாரமும் இன்றி தன்னை தானே புகழ்ந்து கொள்கிறார். கும்பமேளா நெரிசலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று கேட்ட போது 30 பேர் இறந்தனர் என்றார். கும்பமேளாவில் படகோட்டி ஒருவர் ரூ.30 கோடி சம்பாதித்தார் என்று கூறினார். அவருக்கு எண்.30 ரொம்ப பிடிக்கும் என தெரிகிறது. பாஜ கட்சி இப்போது முஸ்லிம்களை குறி வைத்து வெறுப்பு பிரசாரம் செய்கிறது. வரும் காலங்களில் பிற்படுத்தப்பட்டோர்,தலித்துகளை குறி வைத்து வெறுப்புணர்வு பிரசாரம் செய்வார்கள்’’ என்றார்.
The post பொருளாதார ரீதியாகவும்,சமூக ரீதியாகவும் நாட்டை பாஜ பலவீனப்படுத்தி விட்டது: அகிலேஷ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.