பனாஜி: கோவாவில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கான ஏலத்தை ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார். முக்கிய கனிமங்களான துத்தநாகம், வைரம்,தாமிரம் மற்றும் பல கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான நாட்டின் முதலாவது ஏலம் கோவா மாநிலத்தில் உள்ள டோனா பவுலா என்ற இடத்தில் நேற்று நடந்தது.இந்த ஏலத்தை ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய கிஷன் ரெட்டி,‘‘ கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சுரங்கத்துறை பல மைல்கற்களை எட்டியுள்ளது.
இது நாட்டின் மிக வேகமான மற்றும் துடிப்பான துறையாக உருவெடுத்துள்ளது. கனிம ஆராய்ச்சியில் புதிய சகாப்தத்திற்கு நாங்கள் அடித்தளம் அ்மைத்து வருகிறோம். இந்த சகாப்தம் வேகமானது, தொழில்நுட்ப ரீதியாக உந்துதல் பெற்றது. உலகளாவிய கனிம நிலப்பரப்பில் நாங்கள் எங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம். இது தனியார் துறைக்கு வாய்ப்புகளுக்கான கதவுகளையும் திறந்துள்ளது’’ என்றார்.
The post கோவா மாநிலத்தில் கனிம வளங்களை வெட்டி எடுக்க ஏலம்: ஒன்றிய அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
