×

பேச்சிப்பாறை அணை மூடப்பட்டது: பெருஞ்சாணியில் 22 கன அடி தண்ணீர் திறப்பு

நாகர்கோவில்: பேச்சிப்பாறை அணை மூடப்பட்ட நிலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 22 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் 2 நாட்கள் சாரல் மழை பெய்தது. நேற்று மாலையிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்திருந்தது. இன்று காலை வரை கொட்டாரம் 2.2, மயிலாடி 3.4, கன்னிமார் 4.2, ஆரல்வாய்மொழி 3.6, பூதப்பாண்டி 2.8, முள்ளங்கினாவிளை 4.2 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.

இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 28.25 அடியாக இருந்தது. அணைக்கு 138 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணை மூடப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 26.25 அடியாகும். அணைக்கு 46 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. இதில் இருந்து வினாடிக்கு 22 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் திட்டத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிற்றார்-1ல் 2.62 அடியும், சிற்றார்-2ல் 2.72 அடியும், பொய்கையில் 15.1 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 9.35 அடியும், முக்கடலில் மைனஸ் 19.1 அடியும் நீர்மட்டம் உள்ளது.

The post பேச்சிப்பாறை அணை மூடப்பட்டது: பெருஞ்சாணியில் 22 கன அடி தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Pechiparai Dam ,Perunjani ,Nagercoil ,Perunjani Dam ,Kumari district ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி பெருஞ்சாணி அணையில் 8 செ.மீ. மழை பதிவு