×

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1 கோடி, 2 கிலோ தங்கம் காணிக்கை

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியலில் ரூ.1 கோடி, 2 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்தது. சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள். அப்போது பக்தர்கள் கோயிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த உண்டியல்கள் மாதம் இரண்டு முறை திறக்கப்பட்டு எண்ணப்படும்.

இந்நிலையில் நேற்று கோயிலில் உள்ள அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் ரூ. 1 கோடியே 6லட்சத்து 20ஆயிரத்து 548 கிடைத்தது. மேலும் 2 கிலோ 150 கிராம் தங்கம், 3 கிலோ 580 கிராம் வெள்ளி, அயல்நாட்டு நோட்டுகள் 103, அயல்நாட்டு நாணயங்கள் 489, கிடைத்தது.

The post சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1 கோடி, 2 கிலோ தங்கம் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Samayapuram Mariamman Temple ,Trichy ,Trichy Samayapuram Mariamman Temple ,
× RELATED சமயபுரம் கோயில் தேரோட்டம் கோலாகலம்…!!