×

உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு செஸ் வீரருக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு செஸ் வீரருக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.03.2025) தலைமைச் செயலகத்தில், மொண்டெனேகுரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷை பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி வாழ்த்தினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், பெட்ரோவாக்கில் நடைபெற்ற FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான பிரணவ் வெங்கடேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்ததற்காக முதலமைச்சர் இன்றைய தினம் உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பிரணவ் வெங்கடேஷ் 2022-ஆம் ஆண்டில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேஷ்க்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப.. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., மற்றும் பிரணவ் வெங்கடேஷ் அவர்களின் பெற்றோர் உடனிருந்தனர்.

The post உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு செஸ் வீரருக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Nadu ,World Junior Championship ,K. Stalin ,Chennai ,Stalin ,Chief Minister ,Mu. K. Stalin ,Headquarters, Montenegro ,FIDE World Junior ,Petrovac ,Dinakaran ,
× RELATED ஆளுநர் எப்போதுமே தபால்காரர்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்