×

பழநி- உடுமலை சாலையில் புளிய மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

பழநி: பழநி- உடுமலை சாலையில் புளியமரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 2 நாட்களாக காற்றுடன் கூடிய சாரல் மற்றும் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பழநி – உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் அ.கலையம்புத்தூர் பகுதியில் நேற்று புளியமரம் விழுந்தது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. தகவலறிந்ததும் பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நவீன இயந்திரங்கள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். சுமார் 2 மணிநேரத்தில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

The post பழநி- உடுமலை சாலையில் புளிய மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Pali-Udumali road ,Palani ,Palani-Udumalai road ,Dindigul district ,Dinakaran ,
× RELATED மாணவர்களை நாற்காலியால் தாக்க முயன்று...