×

ஒன்றிய கல்வி அமைச்சரை கண்டித்துஇந்திய மாணவர் சங்கம் போராட்டம்

 

திருவாரூர், மார்ச் 13: ஒன்றிய கல்வி அமைச்சரை கண்டித்து திருவாரூரில் அரசுகல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய கல்விக் கொள்கை மற்றும் 3வது மொழி திணிப்பு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க மறுப்பது, தமிழக எம்பிக்களை கொச்சைப்படுத்தி பேசியது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானை கண்டித்து திருவாரூரில் நேற்று திரு.வி.க. அரசு கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை தலைவர் செல்வா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுகதேவ், துணைத்தலைவர் சந்தோஷ் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய கல்வி அமைச்சரை கண்டித்துஇந்திய மாணவர் சங்கம் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Indian Students' Union ,Union Education ,Minister ,Tiruvarur ,Government College ,Union Education Minister ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் பரவலாக முறைகேடுகள்...