×

ரேஷன் கடைகளில் மார்ச் 31ம் தேதிக்குள் கைரேகை பதிவு அவசியம்: கலெக்டர் சுகுமார் அறிவிப்பு

 

நெல்லை, மார்ச் 13: ரேஷன்கார்டுகளில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ரேஷன் கடைகளில் தங்களது கைரேகையினை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பதிவு செய்திட வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏஏஒய் மற்றும் பிஎச்எச் குடும்ப அட்டைதாரர்கள், அரசு வழங்கும் அனைத்து சிறப்பு சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களை தொடர்ச்சியாக பெறுவதற்கு குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது கைரேகையினை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பதிவு செய்திட வேண்டும். குடும்ப உறுப்பினர் எவரேனும் வெளியூர்களில் இருப்பின் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களது கைரேகையினை உடனடியாக பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ரேஷன் கடைகளில் மார்ச் 31ம் தேதிக்குள் கைரேகை பதிவு அவசியம்: கலெக்டர் சுகுமார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Collector ,Sukumar ,Nellai ,Nellai District ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி