- மத்திய அமைச்சர்
- வேதாரண்யம்
- திமுக
- வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்
- தர்மமேந்திர பிரதான்
- செயலாளர்...
- யூனியன்
- அமைச்சர்
- தின மலர்
வேதாரண்யம், மார்ச் 12: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தரக்குறைவாக விமர்சித்ததை கண்டித்து, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நகர, ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வேதாரண்யம் நகர திமுக செயலாளர் புகழேந்தி தலைமை வகித்தார். வேதாரண்யம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேதரத்தனம், வேதாரணயம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை நாகரீகம் இல்லாதவர்கள் என்று தரக்குறைவாக விமர்சித்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து ஒன்றிய அமைச்சரின் புகைப்படத்தை தீயிட்டு எரித்து திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய அமைச்சர் உருவ படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
