×

கடல் அலையில் சிக்கி மாணவி பலி

புவனகிரி: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் உள்ள கடற்கரையில் நேற்று மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த கோயில்களில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரிக்கு வந்தன. குறிஞ்சிப்பாடி அருகே அம்பலவாணன்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமாரின் மகளான 11ம் வகுப்பு மாணவி பிரின்சியும் (16) உறவினர்களுடன் வந்து கடலில் குளித்துள்ளார். அப்போது திடீரென கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

The post கடல் அலையில் சிக்கி மாணவி பலி appeared first on Dinakaran.

Tags : sea waves ,Buvanagiri ,Periyakuppam ,Puduchattaram ,Cuddalore district ,Swamis ,Ambalavananpettai ,Kurinjipadi… ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...