×

எஸ்.சி, எஸ்,டி, ஓபிசி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சரவரம்பை அதிகரிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி எம்.பி. கோரிக்கை

புதுடெல்லி: மக்களவையில் நேற்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி பேசியதாவது: எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான மெட்ரிக்-கிற்கு முந்தைய மற்றும் பிந்தைய உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பு 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது. அதேநேரம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கான தேசிய ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப், மற்றும் உயர்தர கல்வித் திட்டம் போன்ற திட்டங்களுக்கு வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கடந்த டிசம்பர் 2024 இல் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஒன்றிய அரசு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கான ப்ரீ-மெட்ரிக் மற்றும் போஸ்ட்-மெட்ரிக் உதவித் தொகைகளுக்கான வருமான உச்சவரம்பை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு மாணவர்களைப் போலவே 8 லட்சமாக உயர்த்தவலியுறுத்தியது. தமிழ்நாடு அரசின் இந்த முன்மொழிவின் மீது ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.

The post எஸ்.சி, எஸ்,டி, ஓபிசி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சரவரம்பை அதிகரிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி எம்.பி. கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : OBC ,Kanimozhi MP ,Lok Sabha ,New Delhi ,DMK ,Deputy General Secretary ,Parliamentary Committee Leader ,SC ,Dinakaran ,
× RELATED எல்லாமே பா.ஜ கட்டுப்பாட்டில்...