×

சென்னை, கோவை மற்றும் ஓசூரில் இந்தியா ஏஐ திட்டத்தின்கீழ் தரவு மையங்கள் அமைக்கப்படுமா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி.கேள்வி

புதுடெல்லி: ‘இந்தியா ஏஐ’ மிஷன் மூலம் தமிழ்நாட்டில் தரவு மையங்கள் அமைக்கப்படுமா ? என மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் மக்களவையில் எழுப்பிய கேள்விகள்: ‘இந்தியாஏஐ’ திட்டத்துக்காக 2025-26ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட ரூ.2,000 கோடி நிதியிலிருந்து, தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள், ஏஐ தொடக்க நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும்?

இந்த திட்டத்துக்காக அரசாங்கத்தால் தனிப்பட்ட தரவு மையங்களை அமைப்பதற்கான திட்டங்கள் உள்ளதா? அவ்வாறு இருந்தால், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஒசூர் ஆகிய இடங்களில் தரவு மையங்களை அமைப்பதற்கான திட்டங்கள் உள்ளதா? ‘இந்தியாஏஐ’ திட்டம் மூலம் நாடு முழுவதும் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்? ஏஐ தொழில்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக மாநில அளவிலான திறன் மேம்பாட்டு திட்டங்கள் கல்வி நிறுவனங்களின் மூலம் செயல்படுத்தப்படுமா?

அவ்வாறு இருந்தால், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும். இந்தியாAI மிஷனின் கீழ், தமிழ்நாட்டில் வாகன தொழில் (Automobile Industry) மற்றும் சுகாதாரத் தொழில் (Healthcare Industry) ஆகிய துறைகளில் AI தொழில்நுட்ப முதலீடுகளை அதிகரிக்க தேவையான திட்டங்களை அரசு பரிசீலிக்கிறதா?அவ்வாறு இருந்தால், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும் எனக் கேள்வி எழுப்பினார்.

The post சென்னை, கோவை மற்றும் ஓசூரில் இந்தியா ஏஐ திட்டத்தின்கீழ் தரவு மையங்கள் அமைக்கப்படுமா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி.கேள்வி appeared first on Dinakaran.

Tags : India ,Chennai ,Goa ,Osur ,Thayanidhi Maran M. B. ,New Delhi ,Tamil Nadu ,People's Choice ,Thayanidhi Maran M. B ,Thayaniti Maran ,Central Chennai Parliament ,Vice-Chair ,Dimuka Parliamentary Committee ,Dinakaran ,
× RELATED பூப்பெய்திய தனியார் பள்ளி மாணவி...