×

திருச்சுழியில் கோயிலில் விளக்கு பூஜை

திருச்சுழி, மார்ச் 13: திருச்சுழியில் மாரியம்மன் கோவில்மாசித் திருவிழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருச்சுழி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன், கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மாசித்திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் திருச்சுழி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது.

மேலும், ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், புஷ்பப் பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். நேற்று மாசி திருவிழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திருச்சுழி சுற்றியுள்ள தமிழ்பாடி, குச்சம்பட்டி புதூர், பச்சேரி, சித்தலக்குண்டு உள்பட ஏராளமான கிராமங்களிலிருந்து பலர் கலந்துகொண்டு அம்மனை தரிசித்துச் சென்றனர்.

The post திருச்சுழியில் கோயிலில் விளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Lantern Pooja ,Trishi ,Tirululaka Pooja ,Mariamman Kovilmasit festival ,festival ,Trinchuzhi Maryamman Temple ,Ramanathapuram ,Samasthanam ,Devastana ,Pooja ,
× RELATED திருவானைக்காவலில் இருந்து கொண்டு...