- மானாமதுரை
- கால்நடை பராமரிப்பு துறை
- கூட்டு இயக்குனர்
- ராமச்சந்திரன்
- உதவி இயக்குனர்
- தங்கமுத்து
- மானாமதுரை நகரம்
- சிப்காட்
- பெரியகோட்டை
மானாமதுரை, மார்ச் 13: மானாமதுரையில் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது. நகராட்சி அலுவலகம் எதிரே நடந்த முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் தங்கமுத்து முன்னிலை வகித்தார். முகாமில் மானாமதுரைடவுன், சிப்காட், பெரியகோட்டை, மாங்குளம், மேலப்பசலை, மேலப்பிடாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 105 வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது. முகாமில் மானாமதுரை கால்நடை மருத்துவமனை டாக்டர் விக்னேஷ், பெரியகோட்டை டாக்டர் உமாபாரதி, ேமலநெட்டூர் டாக்டர் ராஜ்குமார் சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை மானாமதுரை கால்நடை ஆய்வாளர்கள் ராஜூ, அய்யனார் செய்திருந்தனர்.
The post வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.