- மதுரை
- 45வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்
- பெங்களூரு, கர்நாடகா
- ஜெயச்சந்திர பாண்டியன்
- மதுரை, செல்லூர் காவல் நிலையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
மதுரை மார்ச் 13: தேசிய அளவிலான 45வது மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பில் மதுரை, செல்லூர் காவல்நிலைய ஏட்டு ஜெயச்சந்திர பாண்டியன் 3 ஆயிரம் மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டிகளில் இரண்டு வெள்ளிப்பதக்கங்களும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும் வென்றார்.
மாநகர ஆயுதப்படையை சேர்ந்த முதன்மை பெண் காவலர் தங்கபெனிலா, 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், மதிச்சியம் போக்குவரத்து ஏட்டு செந்தில்குமார், உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற அனைவரையும், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், நேரில் அழைத்து பாராட்டினார்.
The post மூத்தோர் தடகளத்தில் வென்றோருக்கு பாராட்டு appeared first on Dinakaran.