×

ப.செ.பார்க்கில் கூடுதல் சிலை வைக்க ஆய்வு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு வளாகத்தில் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகள் உள்ளன. அதன் கீழ் போட்டி தேர்வு நூலகம் செயல்படுகிறது. இவ்விடத்தை அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு செய்து, வரிசையாக சிலைகள் உள்ள பகுதியில் கூடுதல் சிலை அமைக்க முடியுமா?, நூலகத்துக்கு முன்புறம் உள்ள இடத்தில் அமைக்க முடியுமா? என ஆய்வு செய்தார். அப்போது, போட்டி தேர்வுக்கான நூலகத்தில் படித்து கொண்டிருந்த மாணவ-மாணவிகளிடம், ‘கூடுதலாக என்ன வசதி தேவை’ என கேட்டறிந்தார்.

வாகனங்கள் அதிகம் செல்வதால், உள்ளே அதிகமாக தூசிகள் வருகிறது. கதவை மூடினால், வெப்பமாக உள்ளது. போட்டி தேர்வுக்கு பயன்படும் வகையில் கூடுதல் புத்தகங்கள் வாங்கி வைக்கவும், கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற அமைச்சர் நூலகத்தில் ஏசி வசதி செய்யலாமா? என உடனிருந்தவர்களிடம் கேட்டறிந்து, விரைவில் செயல்படுத்துவதாகவும், புத்தகங்கள் கூடுதலாக வாங்கி வைக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

The post ப.செ.பார்க்கில் கூடுதல் சிலை வைக்க ஆய்வு appeared first on Dinakaran.

Tags : P.C. Park ,Ambedkar ,Periyar ,Annadurai ,Karunanidhi ,MGR ,Jayalalithaa ,Erode Panneerselvam Park ,Minister ,Muthusamy ,Dinakaran ,
× RELATED ஏப்.14ல் நியூயார்க்கில் அம்பேத்கர் தினம்