பழநி, மார்ச் 13: பழநி அருகே எரமநாயக்கன்பட்டியில் தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. தொப்பம்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் சபினா தலைமை வகித்தார். இம்முகாமில் தேனீக்களின் இனங்கள், தேனீ பராமரிப்பு மற்றும் தேனீ வளர்ப்பில் உள்ள தொழில்நுட்ப முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. தொடர்ந்து தேனின் மதிப்புக்கூட்டு பொருட்களான தேன் மெழுகு, மரப்பிசு, போலன் எடுக்கும் முறை குறித்தும், அதனை சந்தைப்படுத்தும் முறை, அதில் கிடைக்கும் வருமானம் உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. இதில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post தேனீ வளர்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.