×

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் சமூகநீதி தினவிழா

நாமக்கல், மார்ச் 13:நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் சமூகநீதி தினம் நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்றது. இதையொட்டி மாணவியருக்கு வளர்ந்த பாரதம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நேரு யுவகேந்திரா மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பசுமை தில்லை சிவகுமார், கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ், தேசிய சேவை தொண்டர் முகமது நிஷார், சத்யா, இளமதி, கன்னிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் ஜெயந்தி மற்றும் நேரு யுவகேந்திரா பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் சமூகநீதி தினவிழா appeared first on Dinakaran.

Tags : Social Justice Day ,Namakkal ,Government Women's ,College ,Namakkal Kavinar Ramalingam Government Women's College ,Nehru Yuvakendra ,Namakkal Government Women's College ,Dinakaran ,
× RELATED தரமான விதைகளையே பயன்படுத்த வேண்டும்